2025 மே 01, வியாழக்கிழமை

சமய நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்: மட்டு. மறைமாவட்ட ஆயர்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 19 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மதக் கலவரங்கள் மற்றும்; மோதல்களும் அதனால் அழிவுகளும் நிகழாதிருக்க சமய நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா தெரிவித்தார்.

சமாதானத்திற்கான இலங்கைச் சமயங்களின் பேரவையின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையானது சமயத் தலைவர்களுடனான ஒன்றுகூடலை மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (18) நடத்தியது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மக்களுக்கிடையில் பிரிவினை ஏற்படாமலிருப்பதும்  சமுதாயத்தில் பிளவுகளை தடுப்பதும் சமூகத்தில் அமைதியை நிலைநாட்டுவதும் ஏனைய  மதத்தவர்களுடன் ஒற்றுமையாக  வாழ்வது மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதும் ஒருவரையொருவர் சகித்து சமூக உறவுடன் வாழ்வது மற்றும் புரிந்துகொண்டு  உறவை வளர்ப்பதும் பொதுப்பணிகளைச் சேர்ந்து ஆற்றுவதும் மனிதநேயம் மற்றும் மனித மீட்பை  வளர்ப்பதும்  மனிநேய அடிப்படையில் பிறரை மதிப்பதும் சமய நல்லிணக்கத்தில் முக்கியமானவையாகும்.

எல்லா மதங்களும் அன்பை வலியுறுத்துகின்றன. ஏனைய  மதங்களிலுள்ள கோட்பாடுகளை, பண்புகளை நாமும் அறிந்து கொள்;வது சமய நல்லிணக்கத்தில் இன்றியமையாததாகும்.

மானிட நேயமும் மானிட மேம்பாடுமே சமய உறவாடலின் மைய நோக்கமாகும். யாரும் தனித்து புதிய சமுதாயத்தை அமைக்க முடியாது. அனைவரோடும் இணைந்துதான் இன்றைய சமுதாய மாற்றத்திற்கு கூட்டுச் செயற்பாட்டின் மூலமாக வழிவகுக்க முடியும். இவ்வாறான சமய கலந்துரையாடல்கள், ஒன்றுகூடல்கள் சமயங்களுக்கு இடையிலான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .