2025 மே 01, வியாழக்கிழமை

அரசாங்கம் த.தே.கூ.வுடன் மட்டுமே பேசவேண்டும்: ஜனா

Kogilavani   / 2014 ஜனவரி 21 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல்-சக்திவேல்

'இலங்கை அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசவேண்டும் என்று கூறிக்கொண்டும், நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்த தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரம்தான் பேச வேண்டும் என்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்' என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்த கருணாகரம் தெரிவித்தார்.  

மட்டக்களப்பு-செட்டிபாளையத்தில் புதிததாக ஆரம்பிக்கபட்ட முன்பள்ளி திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

'கடந்த வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் திரண்டெழுந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முழு ஆதரவையினையும் கொடுத்ததிற்காக உலகமே ஒரு கணம் வியந்து பார்த்தது. தமிழ் மக்கள் ஒன்றாக நிற்கின்றோம், தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனை வட பகுதி மக்கள் எடுத்துக் காட்டினார்கள்.

கிழக்கு மகாகாணத்தில் நடைபெற்ற கடந்த மாணாகசபைத் தேர்தலில் எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இன்னும் பத்தாயிரம் வாக்குகளை அளித்திருந்தால் இந்த கிழக்கு மாகாண சபையினையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வடமாகாணசபை போன்று கிழக்கிலும் எமது மக்களுக்காக வேண்டி போராடியிருப்போம்.

இன்று தமிழ் மக்கள் தமிழ் தேசியத்துடனேயே இருக்கின்றார்கள். இதனை எமது மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

கடந்த 2012 ஆம் அண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக போட்டியிட்டேன். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எனக்கு 14500 வாக்குகளை அளித்து என்னையும் தெரிவு செய்து மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு கிழக்கு மாகாணசபைக்கு அனுப்பியுள்ளார்கள். இதுதான் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்துடன் இருக்கின்றார்கள் என்பதற்கு சிறந்த ஒரு உதாரணமும் எடுத்துக் காட்டுமாகும்.
எதிர்காலத்தில தமிழ் பேசும் மக்கள் வடக்கு கிழக்கில் ஒன்றாக இருந்து செயற்பட்டு எமது பலத்தினையும் ஒற்றுமையினையும் இந்த நாட்டிற்கும், இந்த அரசிக்கும் எடுத்துரைக்க வேண்டும்.

தமிழ் மக்கள் இவ்வளவு காலமும் இழந்தவைகளைப் பெறவேண்டுமாக இருந்தால் தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எமது கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மிகவும் நெறுக்கமாக வாழ்;ந்து வருகின்றார்கள்.

தமிழ் போசும் சமூகம் ஒறறுமையுடன் செயற்பாட்டு எமது சுய நிர்ணய உரிமைகளைப் பெற்று எமது பிரதேசத்தினை குறிப்பாக வடக்கு கிழக்கு மாகணத்தினை ஆள்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

எமது கலாசாரங்கள் மாற்றப்படுகின்றன, கிராமங்கள் தோறும் புத்தர் சிலைகள் முளைக்கின்றன, கிராமங்களில் வெள்ளரசு மரங்களை பார்த்தால்; புத்தர் சிலைகள் முளைத்துவிடுமே என்ற பயம் வருகின்றது.

எனவே எமது மாகாணத்தில் காணி, பொலிஸ் அதிகாரத்துடன், சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியினை அமைப்பதற்கும் எமது உரிமைகளைப் பெறும் வரைக்குமாவது தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

தமிழ் பேசும் மக்களாகவே இருக்க வேண்டும், நாங்கள் எல்லாம் ஒன்றாக இருந்து உரிமைகளைப் பெறவேணடும் என்;று வேண்டுகின்றேன்' அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .