2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஏறாவூர் பிரதான வீதியின் விஸ்தரிப்பு பணிகள் ஜுனில் ஆரம்பம்: நகர பிதா

Super User   / 2014 ஜனவரி 26 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் நகரின் பிரதான வீதி விஸ்தரிப்பு பணிகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் மேற்கொள்ளப்படவுள்ளது என நகர பிதா அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் பயணிக்கக் கூடிய இரு வழி பாதையாகவும் பாதசாரிகளுக்கும் வாகனம் நிறுத்தி வைப்பதற்குமான தடத்தைக் கொண்டதாகவும் பிரதான வீதி விஸ்தரிக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்கு நகர வர்தத்தகர்கள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இதற்கு தேவையான வகையில் கடைகளை உடைப்பதாகவும் உறுதியளித்துள்ளனர் என நகர பிதா தெரிவித்தார்.

இது தொடர்பிலான கூட்டமொன்று ஏறாவூர் பிரதான வீதி நகர வர்த்தகர்களுக்கும் நகரபிதா அலிஸாஹிர் மௌலானாவுக்கும் இடையில் அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .