2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்திற்கு ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 29 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஐந்தாம் தரத்திற்கும் ஆங்கிலப் பாடத்திற்கும் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், இவற்றுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக  மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மேற்படி பாடசாலையில் ஐந்தாம் தரத்திற்கும் ஆங்கிலப் பாடத்திற்கும் ஆசிரியர்கள் இல்லாமை தொடர்பில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை பெற்றோர் தெரிவித்ததாகவும்   அவர் கூறினார்.

மேலும், புதிய நியமனங்கள் வரும்போது முன்னுரிமை அடிப்படையில் ஆங்கிலப் பாட  ஆசிரியர் ஒருவரை நியமிப்பதாகவும்  அவர் கூறினார்.

மேற்படி பாடசாலைக்கு போதுமானளவு ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமெனக் கோரி  பாடசாலையின் நுழைவாயிலை மூடி அப்பாடசாலை மாணவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக  பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர் ஏ.எச்.ஆமினா உம்மா தெரிவித்தார்.

இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 1996ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஆங்கிலப் பாடத்திற்கு  ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்பதுடன்,  ஐந்தாம் தர  புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்படுத்த ஆசிரியர் ஒருவரேனும் இல்லை எனவும் பெற்றோரும் மாணவர்களும் கூறுவதாக மேற்படி பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் மற்றைய உறுப்பினர் எம்.ஐ.மைனா உம்மா தெரிவித்தார்.

இருப்பினும், வலயக் கல்வி அலுவலகத்தில் பிரச்சினைகளை முன்வைக்குமாறு கோரியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .