2025 மே 02, வெள்ளிக்கிழமை

தாயுமானவர் சுவாமியின் குரு பூசை தினம்

Kogilavani   / 2014 ஜனவரி 29 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல்-சக்திவேல்

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்.மண்டூர் ஸ்ரீ இராமகிருஷ்ணா அறநெறிப் பாடசாலையும் இணைந்து நடாத்தம் 'தாயுமானவர் சுவாமி' அவர்களின் குரு பூசை தினம் எதிர்வரும் 2014.02.02 ஆம் திகதி காலை 10 மணிக்கு மட்.மண்டூர் இராமகிருஷ்ணா கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக மண்டூர் இராமகிருஷ்ணா அறநெறிப் பாடசாலை அதிபர் கு.ஜதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

மண்டூர் இராமகிருஷ்ணா அறநெறிப் பாடசாலையின் அதிபர் குழந்தைவேல்-ஜதீஸ்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மட்டக்களப்பு இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி. எழில்வாணி-பத்மகுமார், போரதீவுப்பற்று பிரதேச கலாசார உத்தயோகஸ்தர் ஆறுமுகம்-பிரபாகரன், அறநெறித்தந்தை வே.ஜெயரெட்ணம் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள், இந்து அமைப்புக்களின் அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் ஏனைய அறநெறிப் பாடசாலை மாணவர்களையும், இந்து அமைப்புக்களையும் இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுப்பதாகவும் மண்டூர் இராமகிருஷ்ணா அறநெறிப் பாடசாலை அதிபர் கு.ஜதீஸ்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .