2025 மே 02, வெள்ளிக்கிழமை

நடமாடும் நூலக வண்டி மீண்டும் சேவையில்

Kogilavani   / 2014 ஜனவரி 30 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடந்த மூன்று வருடங்களாக பழுதடைந்த நிலையில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த காத்தான்குடி நகர சபையின் நடமாடும் நூலக வண்டி மீண்டும் செவ்வய்க்கிழமை (28) முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இந்த நடமாடும் நூலக வண்டி பழுதடைந்தது.

தற்போது இது சரிசெய்யப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள 18 கிராமங்களுக்கு இந்த பஸ் வண்டி சென்று நூலக சேவையினை நடாத்தி வருவதுடன் தினமும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இந்த சேவையினை வழங்கி வருவதாக காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

இந்த நடமாடும் நூலக வண்டியில் நூலக இரவல் பகுதி அமைக்கப்பட்டுள்ளதுடன் இதில் பாடசாலை மாணவிகளும் மற்றும் பெண்களும் நன்மையடைந்து வருகின்றனர் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .