2025 மே 02, வெள்ளிக்கிழமை

பட்டிருப்பில் ஆசிரியர் பற்றாக்குறை

Menaka Mookandi   / 2014 ஜனவரி 30 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


'பட்டிருப்பு கல்வி வலயத்தில் 60 ஆங்கில ஆசிரியர்களுக்கும், 34 தகவல் தொழில்நுட்பட ஆசிரியர்களுக்கும், பற்றாக்குறை இருந்து வருகின்றது' என பட்டிருப்பு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று (29) பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் கலந்துகொண்டிருந்தார். 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வலயக் கல்விப் பணிப்பாளர், 'பட்டிருப்பு கல்வி வலயத்தினுள் 1,200 ஆசிரியர்கள் இருந்தாலும் பாடரீதியாக ஆசிரியர்களின் பற்றாக்குறை இருந்து வருகின்றது. இந்த விடயம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரிடமும் எடுத்துக் கூறியிருந்தேன். அதன் காரணமாக 40 ஆசிரியர்கள் இந்த வலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்' என்றார்.

'ஆனாலும் தற்போது 60 ஆங்கில ஆசிரியர்களுக்கும், 34 தகவல் தொழில்நுட்பட் ஆசிரியர்களுக்கும், எமது வலயத்தில் பற்றாக்குறை இருந்து வருகின்றது. இந்நிலையில் கலைப் பட்டதாரிகளுக்கும் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கும் பயிற்சியளித்து விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களைக் கற்பிப்பதற்கு பயன்படுத்தி கடந்த காலங்களில் மாணவர்களின் பெறுபேறுகளை உயர்தியிருந்தோம். அந்த வகையில் இந்த வலயத்திற்குட்பட்ட அதிபர்கள். ஆசிரியர்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்கள்.

பட்டிருப்பு கல்வி வலயத்தில் 80 வீதமான ஆசிரியர்கள் பெண்களாக இருந்து சிறந்த முறையில் கற்பித்து வருகின்றார்கள். இம்முறை வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்குமேல் 72 வீதமான மாணவர்கள் இந்த வலயத்தில் பெற்றுள்ளமையினையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

விளையாட்டில் மாகாண மட்டத்தில் எமது கல்வி வலயம் இரண்டாம் இடம்பெற்றுக் கொண்டுள்ள இவ்வேளையிலும் பல பாடசாலைகளில் மைதானப் பற்றாக்குறைகளோடு இயங்கி வருகின்றன. இவ்வாறு பாடசாலைகளில் காணப்படுகின்ற பௌதீக வளப்பற்றாக்குறைகளை தீர்க்கப்பட வேண்டும் என பிரதியமைச்சரிடம் இவ்விடத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன்' என அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .