2025 மே 02, வெள்ளிக்கிழமை

நாகதம்பிரான் ஆலயம் உடைப்பு: செப்புத் தகடு திருட்டு

Kogilavani   / 2014 ஜனவரி 30 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினுள் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயம் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த செப்புத் தகடுகள் களவாடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை (29) மாலை பூஜைகள் நிறைவுற்றவுடன் வழமைபோன்று ஆலயத்தினை பூட்டிவிட்டு சென்றதாகவும் இன்று (30) காலை வந்து பார்க்கும்போது ஆலயம் உடைக்கபட்டுள்ளதனை அவதானித்ததாகவும் ஆலய குருக்கள் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்; களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .