2025 மே 02, வெள்ளிக்கிழமை

தாழங்குடாவில் முன்பள்ளி திறப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 31 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
, எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரீ.எல்.ஜவ்பர்கான்

'அனைவருக்கும் கல்வி' என்ற  நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் மட்டக்களப்பு தாழங்குடா தமிழ்க் கிராமத்தில் முன்பள்ளி  நேற்று  வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

தாழங்குடா ஸ்ரீசித்தி விநாயகர் முன்பள்ளி பாடசாலை அமைப்பதற்காக முஸ்லிம் எயிட் இலங்கைக் கள அலுவலகம்  16 இலட்சத்து ஐம்பதினாயிரம்; ரூபா செலவு செய்ததாக முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி தெரிவித்தார்.

இதன்போது முன்பள்ளி பாடசாலை மாணவர்கள் 35 பேருக்கு தலா 600 ரூபா பெறுமதியான பாடசாலைப் பைகளும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

மண்முனை பிள்ளையார் திருப்பணிச் சபைத் தலைவரும் முன்னாள் மண்முனைப்பற்றுப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளருமான ஏ.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு உதவி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நிகழ்வில் முஸ்லிம் எயிட் இலங்கைக் கள அலுவலகத்தின் வதிவிடப் பிரதிநிதி ஏ.சி.பைஸர்கான், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மண்முனைப் பிரதேச சபையின் செயலாளர் சி.ஜெயமணி அருட்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .