2025 மே 02, வெள்ளிக்கிழமை

தாய் சேய் நலன்மேம்பாட்டு செயலமர்வு

Kogilavani   / 2014 ஜனவரி 31 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


உணவு போசாக்குடனான தாய்,சேய் நலன் மேம்பாட்டு ஒருநாள் செயலமர்வு வியாழக்கிழமை செடோ நிறுவன மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இ.தங்கவடிவேல்  தலைமையில் புதுக்குடியிருப்பு  என்.டி.பி.விடுதியில் இடம்பெற்றது.

சுகாதார அமைச்சின் அனுரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணயகத்தின் வழிகாட்;டலில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இச்செயலமர்வில், வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு,  கிரான், செங்கலடி, ஏறாவூர் நகரம் ஆகிய ஆறு பிரதேச செயலகப் பிரிவுளைச் சேர்ந்த 50 தாய்மார்கள் கலந்துகொண்டனர்.

வவுணதீவு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எம்.கலைச்செல்வி மற்றும் ஏறாவூர் கொக்கடிச்சோலை சுகாதார வைத்தியதிகாரிகள்; விரிவுரைகளை நடத்தினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .