2025 மே 02, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் மீது தாக்குதல்

Super User   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.அலி சப்ரி  நபரொருவரினால் நேற்றிரவு தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய காத்தான்குடி பதுறியா ஜும்ஆ பள்ளிவாயல் குறுக்கு வீதியிலுள்ள தனது வீட்டுக்கு முன்னாள் இரவு ஒன்பது மணியளவில் நின்று கொண்டிருந்தபோது அந்த வீதியினால் மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் தனது தலைகவசத்தினால் அலி சப்ரியை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து காயமடைந்த நகர சபை உறுப்பினர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நகர சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் தன்னை தாக்கிய நபரை அடையாளப்படுத்தி அவரின் பெயர் விபரங்களை அலி சப்றி வழங்கியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பார்வையிட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .