2025 மே 02, வெள்ளிக்கிழமை

கதிரவெளியில் மூங்கில் படகு கரை ஒதுங்கல்

Super User   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம், எம்.எஸ்.எம்.நூர்தீன்


வாகரை, கதிரவெளி கடற்கரை பிரதேசத்தில் நேற்று காலை சுமார் 30 அடி நிளமும் 12 அடி அகலமும், 04 அடி உயரமுமான மூங்கில் படகொன்று கரை ஒதுங்கியுள்ளது என கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

கரை ஒதுங்கிய இப்படகு இலங்கையில் அன்மையில் ஒதுங்கிய மூங்கில் படகில் நான்காவது படகாகும் என அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே சத்துருக்கொண்டான், பருத்தித்துறை, காத்தான்குடி, கதிரவெளி ஆகிய நான்கு இடங்களில் இது போன்ற படகுகள் ஒதுங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கரை ஒதுங்கிய படகுகளில் மனிதர்கள் எவரும் இருக்கவில்லை என்றும் படகு மாத்திரமே கரை ஒதுங்கியதாகவும்  மாவட்ட உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

கதிரவெளியில் கரை ஒதுங்கிய படகு தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விசாரணை முடிவுற்றதும் கடற்றொழில் திணைக்களத்தின் அறிவுருத்தலின் படி கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு குறித்த பொறுப்பளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .