2025 மே 02, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் கலந்துரையாடல்

Super User   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல் சக்திவேல்


'எதிர்காலத் தெரிவு விவேக வழியா அல்லது கடும்போக்குத்தனமா எனும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர், யுவதிகள் மற்றும் சர்வமத தலைவர்களிடையேயான கலந்துரையாடல் ஒன்று நேற்று மடக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.

'முஸ்லிம் எயிட்' எனும் அரச சார்பற்ற அமைப்பின் எற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநித்தித்துவப்படுத்தும் இளைஞர்கள், யுவதிகள் சர்வமதத் தலைவவர்கள் மற்றும் பொது அமைப்புக்ளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கடந்த 10 ஆண்டு காலமாக மனிதாபிமான மற்றும் வாழ்வாதாரப் பணிகளில் ஈடுபட்டுவரும் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் சேவைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்வில் 'முஸ்லிம் எயிட்' நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பைசர் கான், மகாத்மா காந்தி சங்கத்தின் இலங்கைக்கான தலைவர் முஹமது சலீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .