2025 மே 02, வெள்ளிக்கிழமை

தரத்தினை நிர்ணயம் செய்ய உணவுகளின் மாதரிகள் கொழும்புக்கு அனுப்பல்

Super User   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எம்.அனாம், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜௌபர் கான்


நுகர்வோரின் பாதுகாப்புக் கருதி காத்தான்குடி நகர சபை பிரிவில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தினை நிர்ணயம் செய்வதற்காக உணவுப் பொருட்களின் மாதரிகள் தேசிய அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதாகர் ஏ.எம்.எம்.றபீக் தெரிவித்தார்.

உணவுப் பொருட்கள் விற்பணை செய்யும் பல்வேறு விற்பணை நிலையங்களை பரிசோதனை செய்தபோது உணவுப் பொருட்களின் மாதரிகளையும் பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். இவற்றை தேசிய அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்த உணவுப் பொருட்களின் தரம் குறித்து அரச பகுப்பாய்வு திணைக்களத்திலிருந்து கிடைக்கும் அறிக்கையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்கள் குறித்த பிரதேசங்களின் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் திடிர் சோதனையிடப்பட்டுள்ளன.

காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி உள்ளிட்ட பல பிரதேசங்களிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த பிரதேசங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பழச்சாறுகள் நெளிந்து போன மீன் டின்கள், சிறுவர்களுக்கான பக்கெற்றில் அடைக்கப்பட்ட ரிப்ஸ்கள், பழச்சாறுகள், நிலக் கடலையில் தயாரிக்கப்பட்ட பலகாரங்கள், குளிரூட்டியில் மீள்பாவினைக்காக வைக்கப்பட்டிருந்த பழங் கறிகள், சோறு, கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக குறித்த பிரதேச மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பரிசோதனையின் போது மனித பாவினைக்கு உதவாத வகையில் உடல் நலத்திற்குக் கேடான பொருட்கள் கண்டறியப்பட்டதாகவும் அவர்கள் கூறினார்.

இதில் சுமார் 80,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் அழிக்கப்பட்டதோடு இவற்றை மோசடியான முறையில் விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டதாகவும் அவர்கள்  தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் விஷேட சுற்று நிருபத்திற்கு அமைவாக குறித்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் வழிகாட்டலில் இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .