2025 மே 02, வெள்ளிக்கிழமை

சகல இன மக்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்க கோரிக்கை விடுக்க தீர்மானம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


சகல இன மக்களின் மத சுதந்திரத்தையும் பதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வழிவகைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுவதென காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் வருடாந்;த மாநாட்டின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் வருடாந்த மாநாடு நேற்று(2.) காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும் ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அதன் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்த்தபா, காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும் ஆ பள்ளிவாயல் பேஸ் இமாம் மௌலவி ஏ.ஜி.எம்.அமீன், காத்தான்குடி மீரா ஜும் ஆ பள்ளிவாயலின் பேஸ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை உட்பட காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் நிர்வாக உறுப்பினர்கள் பொதுச்சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த வருடாந்த மாநாட்டின் இறுதியில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சகல இன மக்களின் மத சுதந்திரத்தையும் பதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வழிவகைகளை மேற் கொள்ளுமாறு ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுவது மற்றும் சகல பல்லின சமய சமூக தலைவர்களையும் சந்திப்பது.

நாட்டிலுள்ள சகல இன மக்களும் என்னென்றும் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் வாழும் ஸ்த்திரமான சூழ்நிலை உருவாக அனைவரும் இறைவனிடம் பிராத்திக்க கோருவது, இஸ்லாமிய ஸரீஆ போதனைகளையும், நல்லொழுக்கம், மற்றும் சமய விழுமியங்களை ஊடகங்கள் மூலம் அறிவுறுத்தல்.

பள்ளிவாயல்களில்  கதீப்மார் இமாம்களாக கடமையாற்றுபவர்களின் நலன்களில் அப்பள்ளிவாயல்களின் நிருவாகிகள் நம்பிக்கையாளர்கள் அக்கறை கொண்டு செயலாற்ற கோருவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்த்தபா தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .