2025 மே 02, வெள்ளிக்கிழமை

பாபுல்லுடன் ஒருவர் கைது

Kanagaraj   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல்-சக்திவேல்

மட்டு.களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரியகல்லாறு பகுதியில் கஞ்சா கலந்த 'பாபுல்' எனப்படும் ஒரு வகையான போதைப் பொருளை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு ஒன்பதினாயிரம் தண்டப்பணம் விதிக்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெரியகல்லாறு பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்ற பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நின்ற ஒரவரை சோதனை செய்த போது இலங்கையில் தடைசெய்யடபட்ட பஞ்சா கலந்த 'பாபுல்'  எனப்படும் போதைப் பொருள் பைக்கட்டுக்களை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் ஒந்தாச்சிமடம் பகுதியினைச் சேர்ந்தவர் எனவும் அவர் களுவாஞ்சிகுடி சுற்றுல நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது அவருக்கு ஒன்பதினாயிரம் தண்டப்பணம் விதிக்கடப்பட்டடாகவும் களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் சட்டவிரோத மதுபாவனை மற்றும் சட்டவிரோத போதைப் பொருட்கள் வினியோகங்களை தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும், தொடர்ந்து பிரதேசத்திலுள்ள சிவில் பாதுகாப்புக்குழுக்களுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்வுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .