2025 மே 02, வெள்ளிக்கிழமை

மீன் வியாபாரியை கத்தியால் குத்திய மற்றுமொரு மீன் வியாபாரி கைது

Kanagaraj   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவு பகுதியில் வெள்ளிக்கிழமை இரண்டு மீன் வியாபாரிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்தி வெட்டில் முடிந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக மீன் வியாபாரி ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டடு மேலதிக சிகிச்சைளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை நிருவாகம் தெரிவிக்கின்றது.

இவ்வியம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது,

களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட களுதாவளை கிராமத்தினைச் சேர்ந்த இரண்டு மீன் வியாபாரிகளுக்கிடையில் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டு வந்துள்ளன. மீன் விற்பனையில் ஏற்பட்டுள்ள போட்டியே இந்த முரண்பாட்டினைத் தோற்றுவித்துள்ளது.

இந்த நிலையில் மீன் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவரும் முனைத்தீவு பகுதியில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் மீன் வெட்டும் கத்தியினால் வெட்டும் நிலை வரைச் சென்றுள்ளது. இதன்போது களுதாவளை சாந்திபுரத்தினைச் சேர்ந்த உருத்திரமூர்தி என்பவர் கத்தி வெட்டுக்கிலக்காகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பத்தின் சந்தேகத்தின்பேரில் மற்றைய மீன் வியாபாரியான களுதாவளை ஸ்ரீமுருகன் ஆலய வீதியினைச் சேர்ந்த சண்முகம்-கோபாலபிள்ளை என்பவர் கைது செய்யப்பட்டு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .