2025 மே 02, வெள்ளிக்கிழமை

திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை நிறுத்துமாறு கோரி மகஜர்

Kogilavani   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்,ஏ.எச்.ஏ.ஹுஸைன் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணானை கிழக்கு பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜரொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அனுப்பி வைத்துள்ளார்.

அவ் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புணானை கிழக்கு பகுதியில் திட்டமிட்ட வகையில் இராணுவத்தினாலும், பௌத்த பிக்கு ஒருவராலும் 39 சிங்கள குடும்பங்கள் குறியேற்றப்பட்டுள்ளன.

இவ்வேளை 1990ஆம் ஆண்டுக்கு முன் இப்பகுதியில் 5 சிங்கள குடும்பங்களே இருந்துள்ளது. இவர்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடவத்தை என்னும் பகுதியில் குடியேறியுள்ளனர். இவர்களுக்கு அரசாங்கத்தால் காணி, வீடு என்பன வழங்கப்பட்டதாகவும், பல வருடம் இடம்பெயர்ந்ததற்கான நிவாரணமும் வழங்கப் பட்டதாகவும் அறிகின்றேன்.

ஆனால் இராணுவத்தினதும், பௌத்த பிக்குவினதும் ஏற்பாட்டில் வேறு மாவட்டத்தை சேர்ந்த 39 சிங்கள குடும்பங்கள் அத்துமீறி இங்கு குடியேறியுள்ளனர்;. இவர்களை இப்பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற வகையில் நடவடிக்கை மேற்கொண்டு உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன்.

அத்தோடு தமிழ் மக்கள் தங்களது பூர்வீக வாழிடங்களில் (புணாணையில்) குடியேறுவதற்கு செல்கின்றனர். இவர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சு மூலம் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இம்மக்களின் காணிகளில் இரணுவ முகாம் இருப்பதால் இம்மக்கள் குடியேற முடியாது திண்டாடுகின்றனர். இங்குள்ள இராணுவமும், பௌத்த பிக்குவும்; தங்களை விரட்டுவதாகவும் கூறுகின்றனர். இதுசார்பாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு தமிழ் மக்கள் எவ்வித தங்கு தடையின்றி மீள்குடியேற உதவுமாறு வேண்டுகின்றேன்' என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பௌத்த பிக்கு ஒருவர் விநாயகர் ஆலயத்தின் காணியை சுவீகரித்துக் கொண்டிருப்பதால் இக்காணியையும் பெற்று கொடுக்குமாறு அன்பாக வேண்டிக் கொள்கின்றேன். நடவடிக்கைக்கான பதிலை அன்பாக கோருகின்றேன்'  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மகஜரின் பிரதிகள் வாகரை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர், வாகரை பிரதேச செயலாளர், புணானை கிழக்கு கிராம அதிகாரி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X