2025 மே 02, வெள்ளிக்கிழமை

இராணுவ வீரருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ வீரரை மார்ச் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இராணுவ சிப்பாயான குணசிறி பிரேமரட்ண ஹேவகே என்பவருக்கே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பில் கடமையாற்றியபோது வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரிடமிருந்து 413,000 ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களும் 83,000 ரூபாய் பெறுமதியான ஐபாட் வகை கைப்பேசியும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்படும் போது இவர் பொலன்னறுவையிலுள்ள 12ஆவது கஜபா இராணுவ ரெஜிமென்ற் அணியில் கடமையாற்றியுள்ளார். விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X