2025 மே 03, சனிக்கிழமை

கிழக்கைப் பற்றி சிந்திப்பதில்லை: பிள்ளையான்

Kogilavani   / 2014 மார்ச் 12 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

\
-வடிவேல்-சக்திவேல்


 'வட மாகாணசபைக்கு மாத்திரம் அதிகாரம் வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் கூறுகின்றார்கள். கிழக்கினைப் பற்றி சிந்திக்கின்றார்களில்லை. தமிழ் அரசியல் தலைமைகளும் தங்களுடைய ஆசனங்களை மாத்திரம் தக்க வைத்துக்கொள்ள சிந்திக்கின்றார்களே தவிர கிழக்கு மாகாணத்தின் தன்மை என்ன, நிலப்பரப்பு என்ன, சனத்தொகை விகிதாசாரம் என்ன என பார்க்கின்றார்களில்லை' என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவசேதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்.ஆனைகட்டியவெளி நாமகள் வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'கிழக்கு மாகாணத்தில் அண்மையில் வழங்கப்பட்ட அரச நியமனமானது மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒரு தமிழருக்குக்கூட கிடைக்கவில்லை என்ற செய்திகள் வெளிவந்துள்ளன. இவைகளெல்லாம் தமிழ் மக்களுக்கு அரசியல் பலம் இல்லாத காரணத்தினால்தான் வருகின்றன என்பதனை விளங்கிக்கொள்ள வேண்டும். இதனை எமது மக்கள் விளங்கிக் கொள்ளும் வரைக்கும் எம்மக்களின் பிரச்சனைகள் தீராது.

கிழக்கு மாகாணசபையின் செயற்பாடு தற்போது உறங்கல் நிலையினை அடைந்துள்ளது. கடந்த வருடம் 41 வீதமான நிதிகள் மாத்திரமே கிழக்கு மாகாண சபையினால் செலவு செய்பட்டன. ஏனைய நிதி செலவு செய்யப்படவில்லை.

எதிர்வருகின்ற 2017, 2018 ஆம் ஆண்டளவில் எமது பிரதேசத்தில் காணப்படுகின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படல் வேண்டும் என்பதற்கு நாம் முயற்சித்து வருகின்றோம்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X