2025 மே 03, சனிக்கிழமை

திவிநெகும சந்தை

A.P.Mathan   / 2014 மார்ச் 13 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


திவிநெகும திட்டத்தில் உற்பத்தியாளர்கள் கூடுதலான இலாபத்தினை பெறும் நோக்கில் உற்பத்தி செய்யப்படும் கிராம சேவகர் பிரிவில் வாராந்த சந்தைகளை உருவாக்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில் வியாழக்கிழமை (13) கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கல்மடு கிராமத்தில் முதன் முதலாக கிராமிய வாராந்த சந்தை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்மடு கிராம சேவை உத்தியோகத்தர் கே.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ், கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.சசிகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை, கல்மடு கிராமத்தில் வாராந்த சந்தை இடம்பெறும் என்றும் இதேபோன்று பிரதேச செயலகப் பிரிவில் ஏனைய கிராம சேவகர் பிரிவுகளிலும் வாராந்த சந்தைகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் பிரதேச செலளார் திருமதி ரீ.தினேஸ் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X