2025 மே 03, சனிக்கிழமை

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

Kanagaraj   / 2014 மார்ச் 14 , மு.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல்-சக்திவேல், எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுர சிறுவன் ஒருவன் பிற்பகல் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

விவேகானந்தபுரத்தினை சேர்ந்த 16 வயதுடைய ச.அரவிந்தன் என்ற சிறுவனே நேற்று வியாழக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையில் நடைபெறும் நிகழ்வு ஒன்றுக்காக தும்பங்கேணி குளத்தில் அல்லிப்பூ பறிக்கச்சென்றபோதே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X