2025 மே 03, சனிக்கிழமை

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மரணம்

Kanagaraj   / 2014 மார்ச் 15 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாநகரசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் உறுப்பினர் எஸ். அருமைலிங்கம் மாரடைப்பினால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கும் ஆதரவுதெரிவுத்தும் மட்டக்களப்பு நகரில் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் தலைமையில் நேற்று அடையாள உண்ணாவிரதம் நடாத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட வீடு சென்றபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

இலங்கை வானொலி தேசிய சேவையில் ஒலிபரப்புப்பட்டு வந்த இதயவீணை நிகழ்ச்சியில் இவர் 'போடியாராக' குரல் கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0

  • Iya Saturday, 15 March 2014 04:00 PM

    கடவுளின் தீர்ப்பு நியாயமானது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X