2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

நலிவடைந்த பெண்களுக்கான வியாபார தொழில் சந்தை

Super User   / 2014 மார்ச் 30 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நலிவுற்ற பெண் முயற்சியாளர்களை வலுவூட்டும் வகையில் ஏப்ரல் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை வியாபார தொழில் சந்தையொன்று நடைபெறவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் வை.எம்.சீ.ஏ நிறுவனமும் சேவ் த சில்ரன் நிறுவனமும் இணைந்து மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இந்த சந்தையை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

சுய தொழில் புரியும் பெண்களை ஊக்குவித்து, அவர்களது உற்பத்திப் பொருட்களுக்காக சந்தை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்காகவும் இச்சந்தை நடத்தப்படுகின்றது.

இதற்கான தொழில் பயிற்சிகள், தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் பரிந்துறைக்கப்படுவதுடன் சிறுவர்களுக்கான விளையாட்டுக்களும் அவர்களுக்கான பரிசில்களும் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு 4ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு மறுநாட்களில் காலை 10.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X