2025 மே 08, வியாழக்கிழமை

மட்டு. வைத்தியசாலையின் களஞ்சியசாலையில் தீ

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் களஞ்சியசாலையில் வெள்ளிக்கிழமை (04)  அதிகாலை பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை தெரிவித்தார்.

இவ்வைத்தியசாலையின் 19ஆம் 20ஆம் விடுதிகளுக்குச் செல்லும் வழியிலுள்ள பழைய களஞ்சியசாலையிலேயே தீ பரவியது. இருப்பினும், வைத்தியசாலை ஊழியர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் அவர் கூறினார்.

இக்களஞ்சியசாலையிலிருந்த பழைய பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இங்கு கழிக்கப்பட்ட சேலைன் போத்தல்கள் மற்றும் இன்னும் சில மருந்துப் பொருட்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

மின்னொழுக்கு காரணமாக தீ பரவியிருக்காலமெனத் தெரிவித்த அவர், இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுதாகவும் கூறினார்.
மேலும், இத்தீ பரவியபோது 19ஆம்  20ஆம் விடுதிகளுக்கோ அல்லது அங்கு தங்கியிருந்த நோயாளர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X