2025 மே 08, வியாழக்கிழமை

குடிநீர் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஓப்பந்தம் கைசாத்து

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

   
-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிராந்திய பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் மற்றும் ஃபாம் சமூக அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் ஒன்றினைந்து ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மூன்று கிராமங்களுக்கு குடிநீர் வசதிகள் வழங்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பெரண்டினா குழுமத்தின் தலைவர் துலான் டி சில்வா மற்றும் ஃபாம் சமூக அபிவிருத்தி சேவைகளின் பணிப்பாளர் சுனில் தொம்பேபொல ஆகியோர் இவ் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

இத் திட்டத்தின் மூலம் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சித்தாண்டி-1, சித்தாண்டி-2 மற்றும் சித்தாண்டி-3 ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள 1000ற்கும் அதிகமான குடும்பங்கள் தேசிய நீர் வழங்கல் வடிகாலாமைப்பு சபை ஊடாக குடிநீர் இணைப்புகளை பெற்றுக்கொள்வார்கள் .

அத்துடன் சுகாதார மேம்பாட்டு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளையும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் பெற்றுக்கொள்வதுடன் இத்திட்டத்தினை அமுல்படுத்தும் பங்குதாரராக ஃபாம் சமூக அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X