2025 மே 08, வியாழக்கிழமை

குறுந்திரைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு பாடும் மீன் 306, சி2 அரிமாக் கழகத்தின் எட்டாவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் வியாழக்கிழமை (03) பயனியர் வீதி கபே சில்; விடுதியில் இடம்பெற்றன.

நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் லயன் பி;;. ஜி. டேவிட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குறுந்திரைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும்  நோக்கோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை வெளியிடப்பட்ட  குறுந்திரைப்படங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 9  இயக்குனர்கள் ஆளுனர் லசந்த பெரேராவினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாடும் மீன் லயன்ஸ் கழக தலைவர் லயன் ஏ. ஜெயகரனால் ஆளுனர், பிரதி ஆளுனர் சபை செயலாளர் எந்திரி ,லயன் என். வி. ரஞ்சன், ஆளுனர் சபை பொருளாளர் லயன் ஜி. பாஸ்கரன் உட்பட ஆளுனர் சபை உறுப்பினர்கள் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்;.

வலைய தலைவர் லயன். என். தர்சன், செயலாளர் லயன் . ரி. தஜேந்திரகுமார் உட்பட ஆரம்பகால லயன் உறுப்பினர்களுக்கு ஆளுனர் லசந்த பெரேராவினால் இலட்சணை வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இதன்போது ஆளுனரின் முன்னிலையில்  புதிதாக இணைந்து கொண்ட 4 லயன் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்ததுடன் அங்கத்துவ இலட்சணையையும் பெற்றுக்கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X