2025 மே 08, வியாழக்கிழமை

இலவச வைத்திய முகாம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள மக்களின் நன்மை கருதி புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட மருத்துவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை(5) புலிபாய்ந்தகல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இலவச  மருத்துவ முகாம் இடம் பெற்றது.

கிரான் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.இளங்கோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நோயாளிகளுக்கு புற்று நோய், பல், கண்,  பரிசோதனைகளும் ஸ்கான், ஈசிஜி, இரத்தப் பரிசோதனைகள் இடம் பெற்றதோடு சிறு கட்டிகளுக்கு சத்திர சிகிச்சைகள் செய்யும் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புலிபாய்ந்தகல், அக்குறானை, முருத்தானை, குடும்பிமலை, சந்திவெளி, முறக்கட்டான்சேனை போன்ற இடங்களில் இருந்து மருத்துவ முகாமுக்கு வருகைதந்த மக்களுக்கான இலவச போக்குவரத்து சேவையினை வேல்ட் விஷன் நிறுவனம் ஒழுங்கு செய்திருந்ததாக கிரான் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.இளங்கோ தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மருத்துவர்களின் சங்கத் தலைவரும் புற்றுநோய் சத்திர சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஏ.பார்த்திபன், தோல் வைத்திய நிபுணர் டாக்டர் என்.தமிழ்வானன், மகப்பேற்று பெண் நோயியல் மருத்துவ நிபுணர் கான்சன வன்சபுர, நோய் கூற்றியல் நிபணர் எஸ். பார்த்தீபன் மற்றும் பதினைந்துக்கு மேற்பட்ட வைத்திய நிபுணர்களும்  கலந்து கொண்டு தங்களது சேவைகளை வழங்கினர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X