2025 மே 08, வியாழக்கிழமை

'வாழ்க்கைப் பள்ளி' பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் முனைக்காடு வேள்ட்விஷன் பயிற்சி நிலையத்தில் மன்னார் மாவட்ட இளைஞர், யுவதிகளுக்காக நடத்தப்பட்ட 'வாழ்க்கைப் பள்ளி' எனும் கருப்பொருளிலான பயிற்சிப்பட்டறை ஞாயிற்றுக்கிழமையுடன்  (06) நிறைவடைந்தது.

பட்டிப்பளை பிராந்திய வேள்ட்விஷன் அபிவிருத்தி வேலைத்திட்டச் செயற்பாட்டின் கீழ், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்களிப்புடன்  வியாழக்கிழமை (03) இப்பயிற்சிப்பட்டறை ஆரம்பமானது.

பட்டிப்பளை பிராந்திய வேள்ட்விஷன் அபிவிருத்தி வேலைத்திட்ட இணைப்பாளர் என்.சபேசனின் தலைமையில் நடைபெற்ற  இப்பயிற்சிப்பட்டறையில் மன்னார் மாவட்டத்தின் சார்பாக வேள்ட்வி'ன் அமைப்பின் முகாமையாளர் எஸ்.செல்வபதி மற்றும் இளைஞர், யுவதிகள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பட்டிப்பளை வேள்ட்விஷன் அமைப்பின் திட்ட இணைப்பாளர் என்.சபேசன் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்ட இளைஞர், யுவதிகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வந்து பயிற்சியளிக்கப்பட்டமையானது, இவர்களுக்கு சிறந்த அனுபவத்தை ஏற்படுத்தும் என்பதற்காகவே.

இளைஞர், யுவதிகள் தங்களது அனுபவத்தில் ஏற்படும் விரக்திகள் மற்றும் பாதிப்புத் தன்மையிலிருந்து விடுபட்டு, அவர்கள் தங்களது கல்வி மற்றும் பொது ஈடுபாடுகளில் சிறப்பாக பங்குகொள்வதற்கான விசேட வேலைத்திட்டமாக  'வாழ்க்கைப் பள்ளி' எனும் கருப்பொருளிலான இப்பயிற்சிப்;பட்டறை மூலம்; இவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் இவர்கள்  எதிர்நோக்கும் சவால்கள், அச்சவால்களுக்கு எவ்வாறான  நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,  இலட்சியப் பாதையில் செல்வதற்கான வழிகள், வாழ்வில்; சிறப்புடையவர்களாக  கல்விமான்களாக திகழ்வதற்கான வழிகள் ஆகியவை பற்றியும்  பயிற்சிகள்  வழங்கப்பட்டன.

மேலும் சூழல், சுகாதாரம், கல்வி,  நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுதல்;,  குழுச் செயற்பாடுகள் ஆகியவை தொடர்பிலும் இவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டதாகவும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X