2025 மே 08, வியாழக்கிழமை

இளைஞர் விவசாயத்திட்டக் கிராம மக்களின் குறைநிறைகள் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று  பிரதேசத்திற்குட்பட்ட இளைஞர் விவசாயத்திட்டக்; கிராம மக்களின் குறைநிறைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கேட்டறிந்துகொண்டனர்.

மேற்படி கிராம மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தை  பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது.

இதன்போதே மேற்படி கிராம மக்களின் குறைநிறைகள் தொடர்பில் இவர்கள் கேட்டறிந்துகொண்டனர்.

இதன்போது குடிநீர், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் காட்டு யானைகளின் தொலைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் மேற்படி மக்கள் முன்வைத்தனர். 

இவர்களின் குறைகளை கேட்டறிந்த கூட்டமைப்பின் பிரதிநிதிகள், மேற்படி குறைபாடுகள் தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து தீர்வைப்  பெற்றுத்தருவாக தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா), ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை), இரா.துரைரெத்தினம், மா.நடராசா, இ.பிரசன்னா, ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X