2025 மே 08, வியாழக்கிழமை

அருள்மிகு ஸ்ரீ கந்த சுவாமி தேவஸ்தானத்தின் பாற்குட பவனி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்த சுவாமி தேவஸ்தானத்தின் பாற்குடப் பவனி நேற்று திங்கட்கிழமை(07) இடம்பெற்றது.

கோட்டக்கல்லாறு அம்பாறைவில் பிள்ளையார் ஆலயத்திலிருந்து இப்பாற்குட பவனி ஆரம்பித்த பக்தர்கள், தோத்திரப் பாடல்களுடன் பசும் பாலை குடங்களில் ஏந்திச் சென்றனர்.

கோட்டக்கல்லாறு கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள மூல மூர்தியான ஸ்ரீ கந்தசுவாமி, வள்ளி, தெய்வயானை சமேதரருக்கும் ஏனைய பரிபாரத் தெய்வங்களுக்கும் பக்தர்கள் இதன்போது பால் சொரிந்து வாழிபாடு செய்தனர்.

இந்நிகழ்வில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X