2025 மே 08, வியாழக்கிழமை

அங்குரார்ப்பண நிகழ்வு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 08 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா

 
கிழக்கு மாகாணத்திலுள்ள யுவதிகளின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 சீ 2 மாவட்டத்தின் கீழ் இயங்கி வருகின்ற 14 லயன்ஸ் கழகங்களின்; வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு பாடு மீன் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இலங்கையிலும் சர்வதேசத்திலும் புகழ் பெற்ற 'ஐ பாப' நிறுவனத்தின் சிகை மற்றும் மணப்பெண் அலங்கார நிபுணர் டாக்டர் பிரேமசிறி ஹேவாவசம் அவர்களினால் இலவச சிகை மற்றும் மணப் பெண் அலங்கார டிப்ளோமா பாடநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு வியாழக்கிழமை(03)  மட்டக்களப்பு லயன்ஸ் மத்திய நிலையத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த பாட நெறி தொடர்பாக சிகை மற்றும் மணப்பெண் அலங்கார நிபுணர் டாக்டர் பிரேமசிறி ஹேவாவசம் கருத்து தெரிவிக்கையில்  நான்  என்னுடைய 25 வருட காலமாக இந்த சேவையில் இலங்கையின் பல பாகத்திலும் உலகத்தின் பல நாடுகளிலும் இந்த பயிற்சி நெறியினை வழங்கி ஏராளமான மாணவர்கள் அத்துறையில் தேர்ச்சி பெற்று சுய தொழிலாக செய்து நல்ல வருமானத்தை பெற்ற இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனா.;

இந்த நிலையில் நான் கிழக்கு மாகாணத்திலும் வடமாகாணத்திலும் உள்ள மக்களுக்கு என்னுடைய சேவையை வழங்க வேண்டும் என்ற நீண்டகால கனவு என்னிடத்தில் இருந்து வந்தது 30 வருடகாலமாக பல இன்னல்களை எதிர் நோக்கிய மக்களுக்கு இந்த டிப்ளோமா பாட நெறியினை இலவசமாக வழங்க வேண்டும் அதனால் அவர்களுடை வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என என்னியிருந்தேன் அந்த கனவு இன்று கிழக்கு மாகணத்திலுள்ள லயன்ஸ் கழகங்களின ஒத்துழைப்புடன் நிறைவேறுவதையிட்டு நான் பெருமைப்படுவதுடன் இறைவனுக்கும் நன்றி கூறிக்கொள்கின்றேன்.

இந்த வகையில் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள 14 லயன்ஸ் கழகஙகளின்; சார்பாக இந்த சிகை மற்றும் மணப் பெண் அலங்கார டிப்ளோமா பாடநெறிக்காக 70 மாணவர்கள முற்றிலும் இலவசமாக சகல வசதிகளுடனும் கற்றுக் கொள்ள இணைத்துக் கொள்ளப்பட்டள்ளனர் 06 மாதகாலத்தைக் கொண்ட இப் பாடநெறி 24 வகுப்புக்களை உள்ளடக்கியதாக நடைபெறவுள்ளது.

இந்த பாடநெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரு மாணவருக்காக 90000.00 செலவாகின்றது மொத்தமாக 70 மாணவர்களுக்கும் 6.3 மில்லியன் செலவு செய்யப்படுகின்றது இந்த செலவுக்கு ஏற்ப மாணவர்கள் நல்ல தேர்சியினை பெற்று வீ.ரீ.ஏ அனுமதி பெற்ற சர்வதேச அங்கிகாரம் கொண்ட சிறப்பு டிப்ளோமா சான்றிதழை பெற்று  தொழில்களை செய்து நீங்கள் உங்களது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் அதுவே என்னுடைய ஆசையாகும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 சீ 2 மாவட்டத்தின் ஆளுனர் லயன் லசந்த பெரேரா எம்.ஜே.எப், 2வது மாவட்ட ஆளுணர் லயன் ஹரிச்சந்திர- எம்.ஜே.எப், ஆளுனர் சமையின் செயலாளர் லயன் சந்தக லெனகல- எம்.ஜே.எப், பிரதி ஆளுனர் சமையின் செயலாளர் லயன் எந்திரி என்.பி.ரஞ்சன், பிரதி ஆளுனர் சமையின் பொருளாளர் பாஸ்கரன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X