2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கதிரவெளியில் 'மக்களின் காலடியில் சேவை'

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


கதிரவெளி கிராம அலுவலகர் பிரிவில் 'மக்களின் காலடியில் சேவை' எனும் 180 நாள் சமூக விழிப்புணர்வு கருத்திட்ட வேலைத்திட்டம் வியாழக்கிழமை (10) நடைபெற்றது.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  கிராம அலுவலகர் பிரிவுகள் தோறும் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குடும்பங்களின் சமூக, பொருளாதார, உட்கட்டமைப்பு அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு 180 நாட்களுக்குள் செயற்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்களை இனங்கண்டு பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அவற்றை  நிறைவேற்றும் வகையில் இக்கருத்திட்டம் பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

வாகரை பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவீரதன்,  பிரதேச செயலகத்தின் சகல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வேலைத்திட்டம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகின்றது. இருப்பினும், இவ்வேலைத்திட்டம்  தொடர்ந்து இடம்பெறும் என ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X