2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஆக்கத்திறன் கண்காட்சி ஞாயிறு நிறைவுபெறும்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 11 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலர் பாடசாலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி வெள்ளிக்கிழமை (11)காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.  இந்த ஆக்கத்திறன் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவு பெறவுள்ளது.

புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை மற்றும் அஸ் ஸஹ்றா பாலர் பாடசாலை, ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அக்கத்திறன் காட்சி புதிய காத்தான்குடி தெற்கு 167 சி கிராமத்திலுள்ள ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை மற்றும் அஸ் ஸஹ்றா பாலர் பாடசாலை கட்டிடத்தில் நடை பெறுகின்றது.

இந்த ஆக்கத்திறன் கண் காட்சியினை பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா திறந்து வைத்தார்.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபை முதல்வர் எஸ்.எச்.அஸ்பா,கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தலைவர் பொன் செல்வநாயகம் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில்,  உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X