2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கிவைப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 13 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரி.எல்.ஜவ்பர்கான்,எஸ்.பாக்கியநாதன்,வடிவேல்-சக்திவேல்

கிழக்கு மாகாணத்திலுள்ள நெசவுப் போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள்  மட்டக்களப்பில் வைத்து சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடை பெற்ற வைபவத்தின் போது கிழக்கு மாகாண விவசாய கால் நடை கிராமிய கைத்தாழில் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் இவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண விவசாய கால் நடை கிராமிய கைத்தாழில் மீன்பிடி கூட்டுறவுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மற்றும் அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 28 பேருக்கு நெசவுப் போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண விவசாய கால் நடை கிராமிய கைத்தொழில் மீன்பிடி கூட்டுறவுத்துறை அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன், கைத்தொழில் திணைக்கள பணிப்பாளர் ஏ.தென்னக்கோன், விவசாய பணிப்பாளர் எம்.ஹுஸைன், உட்பட அமைச்சின் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட விவசாய போட்டிகளில் வெற்றி பெற்ற சிறந்த விவசாயிகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.



 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X