2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மறுச்சுக்கட்டி முதல் அறுகம்பை வரை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்கிறது

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'வட மாகாணத்திலே மறிச்சுக்கட்டி என்கின்ற இடத்தில் தொடங்கி கிழக்கு மாகாணத்திலே அறுகம்பை வரையும் முஸ்லிம்களுக்குக் காணிப் பிரச்சினை இருக்கின்றது' என்று உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

 'காணி வரலாற்றைத் தெரிந்து கொள்ளாத சக்திகள் இன்று தமிழர்களுக்கும் - முஸ்லிம்களுக்கும் இடையிலும் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலும் பகைமையயை ஏற்படுத்துகின்றன' என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவாகி தற்சமயம் உதவிப் பிரதேச செயலாளர்களாகக் கடமையாற்றிக்கொண்டிருக்கும் ஏறாவூரைச் சேர்ந்த அதிகாரிகளைப் பாராட்டும் விழா கடந்த சனிக்கிழமை (12) ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறுகையில், 'காணிப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமல் முஸ்லிம்களைக் காணிக் கொள்ளையர்கள் என்று அவமானப் பட்டம் சூட்டி முத்திரை குத்துவதற்கு இப்பொழுது இரண்டு பெருந்தேசிய இனங்களும் முனைந்திருக்கிருக்கின்றார்கள். முஸ்லிம்களை காணிக் கொள்ளையர்கள் என்று முத்திரை குத்துவதில்தான் அவர்கள் குறியாய் இருக்கின்றார்கள்.

எங்கிருந்தோ ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்று வடக்கிலே இறக்கிவிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்ற அநியாயங்கள் கண் முன்னாலேயே நடைபெறுகின்ற நிலைமை இன்று ஏற்பட்டிருக்கின்றது.

மன்னாரிலே முஸ்லிம்களைத் துவம்சம் செய்துவிட சிங்களத் தீவிரவாத இயக்கங்கள் இப்பொழுது போட்டி போட்டுக்கொண்டு நிற்கின்றன' என்றார்.

இன்று முஸ்லிம்கள் முள்ளுக் கொப்பில் விழுந்த சேலையைப் போல் மிகக் கூடுதலான நெருக்கடிக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். தங்களை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளை பணிந்து போய் கையாள்வதா அல்லது எகிறிக் குதித்து அடர்ந்தேறுவதா அல்லது விமோசனத்துக்கான வழிமுறைகளைப் புதிதாகக் கண்டுபிடித்துப் போவதா என்பதுதான் இன்று முஸ்லிம் சமூகத்தின் முன்னாலுள்ள கேள்வி.

புதிதாக ஏற்பட்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று நாம் எல்லோரும் இணைந்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும். அதிகாரிகள் மட்டத்தில் துவங்கி ஆய்வாளர்கள் வரை இந்த வியடங்களை அவசரமாகவும் அவசியமாகவும் ஆராய வேண்டும்' என்று அமைச்சர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0

  • M.A.A.Rasheed Tuesday, 15 April 2014 12:22 PM

    முதலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்று சேருங்கள். பலம் தானாக உருவாகும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X