2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

விடிவை நோக்கி நூல் வெளியீட்டு விழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளையைச்சேர்ந்த கலாநிதி .கண்ணமுத்து-சிதம்பரநாதன் என்பவரால் எழுதப்பட்ட 'விடிவை நோக்கி '  எனும் நூல் கடந்த 21.03.2014 அன்று இந்தியாவின் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந் நூலானது இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் அவலநிலை அவர்களின் எதிர்காலம் என்பவற்றை மையப்படுத்தி மூன்று வருட ஆய்வின் பின்னர் இந் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

கலாநிதி கண்ணமுத்து-சிதம்பரநாதன் அவர்கள் இலங்கையிலே உயர் பதவிகளைவகித்து இங்கிலாந்து சென்று தற்போது பிரித்தானிய அகதிகள் பணியகத்தில் சுமார் 23 வருடங்கள் சேவைசெய்து வருவதோடு, சர்வதேச குடிவரவு அமைப்பின் (ஐ.ஓ.எம்) ஆலோசகராகவும் தனது பணியினை முன்னெடுத்து வருகின்றார்.

இவர் தனது சட்டக்கல்வியை முடித்து எமது நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி பிறநாட்டவர்களுக்கும் பல உதவிகளை செய்துவருகின்றார். மேலும் இவர் இந்தியாவில் இலங்கை அகதிகளுக்கான அறக் கட்டளையினைத் ஸ்தாபித்து அதனூடாக இலங்கை அகதி மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு பல உதவிகளை செய்துவருகிறார்  என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X