2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கல்விச்சுற்றுலா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


சித்திரைப் புதுவருடத்தையொட்டி மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியில் தொழிற்கல்விப் பயிற்சியினை மேற்கொண்டு வரும் மாணவர்களும் அதன் ஊழியர்களும் வியாழக்கிழமை (17) ஹம்பாந்தோட்டைக்கு ஒரு நாள் கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டனர்.

இச்சுற்றுலாவின் போது ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள உப்பளம், துறைமுகம், சர்வதேச விளையாட்டரங்கு மற்றும் சர்வதேச மத்தல விமான நிலையம் என்பவற்றை பார்வையிட்டனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இக் கல்லூரியின்  முதலாவது சுற்றுலாப் பயணம் இதுவென்றும் இவ்வாறான சுற்றுலாப் பயணங்கள் மாணவர்களிடையே ஓர் ஒற்றுமையையும்  மனஉலைச்சல்களையும் போக்கி மகிழ்வினைப் பகிர்ந்துகொள்ளக் கூடியதாக இருந்தது என கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் இச்சுற்றுலாவின் போது மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு குழுத்தலைவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டதால் குழுச்செயற்பாட்டுடன் தலைமைத்துவ பண்புகளும் அவர்களிடையே வளர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X