2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சிறையில் சித்திரைக்கொண்டாட்டம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,   ஜவ்பர்கான்,
எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு சிறைச்சாலையில், தமிழ் சிங்கள புதுவருட புத்தாண்டு விழா சனிக்கிழமை(19) நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஏ.கித்சிறி பண்டார தலைமையில் நடைபெற்ற இப்புத்தாண்டு விழாவில், கைதிகளுக்கான பனிஸ் சாப்பிடுதல், மற்றும் தலையணை சமர், ஓலை பின்னுதல், முட்டி அடித்தல், யானைக்கு கண் வைத்தல் உட்பட பல்வேறு பாரம்பரிய கலை கலாசார போட்டிகள் நடைபெற்றன.

இதன் போது வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் டாக்டர் கே.கருணாகரன், மட்டக்களப்பு போனதா வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு தலைவர் ராஜன் மயில்வாகனம், மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம சிறைச்சாலை அதிகாரி ஏ.மோகன், சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்களான எம்.விநாயக மூர்த்தி எஸ்.ரஞ்சன், சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X