2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சமுர்த்தி பயனாளிகளுக்கு அன்பளிப்புகள்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


சித்திரைப் புத்தாண்டையொட்டி கோறளைப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்கத்தில் சேமிப்பு மற்றும் நிலையான கணக்குகளில் வைப்பு செய்யும் பயனாளிகளுக்கான பரிசில்கள் வழங்கும் வைபவம் வியாழக்கிழமை (17) கோறளைப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்கத்தில் இடம் பெற்றது.

சமுர்த்தி வங்கி முகாமையாளர் கே.லதா தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில்; சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி தேவமனோகரி பாஸ்கரன், சமுர்;த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும்  பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடுவோருக்கு 24.04.2014ம் திகதி வரை அன்பளிப்புக்கள் வழங்கப்படும் என்று சமுர்த்தி வங்கி முகாமையாளர் கே.லதா தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X