2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மண்முனைத்துறை வாவி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மண்முனைத்துறை வாவி மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தினையும் எழுவான்கரைப் பகுதியினையும்  பிரிக்கும் வாவியாக காணப்பட்டது.

இவ் வாவி ஊடாக   விவசாயி, உத்தியோகத்தர்கள், அரசியல் வாதிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் போக்குவரத்துக்கென இவ்வாயிவில் உள்ள இயந்திரப் படகினையே பயன்படுத்திவந்தனர்.

இவ்வாவிக்கு பாலம் அமைக்கப்பட்டு இன்று சனிக்கிழமை (19)  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட உள்ளது.

இவ்வாவியின் ஊடாக பயணித்த நினைவுகளை திரும்பி பார்க்கின்ற போது

போக்குவரத்து செய்கின்ற போது மக்கள்; குறித்த நேரத்திற்கு உரிய இடங்களுக்கு செல்ல முடியாது காரணம் அவர்களது நேரத்திற்கு இயந்திரப் படகு பயணிக்காது, இதனால் பயணித்த மக்கள், அதிக நேரத்தை வாவிக்கரை ஓரங்களில் கழித்தால் பல ஊர் கதைகளும் தெரியாத விடங்களை அறிந்து கொள்கின்ற இடமாகவும் குறிப்பாக சமூக ஒருங்கிணைப்பை பேணுகின்ற இடமாகவும் இது இருந்தது. காரணம் பயணத்திற்காக வாவிக்கரை ஓரத்தில்  அரை மணித்தியாலத்திற்கு மேல் நிற்க வேண்டிய சூழலிருந்தது.

நீண்ட காலம் சந்தித்தவர்கள் இப்போக்குவரத்தில் சந்தித்து, உரையாடிய வரலாறுகளும் பல உள்ளன.

இயந்திரப் படகு இரவு 10 மணிக்குப் பின்னர் சேவையில் ஈடுபடாததால் படுவான்கரையிலிருந்து வைத்தியசாலைக்கு ஒரு நோயாளியை உரிய நேரத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது இதனால் இடையில் இறந்தவர்களும் உண்டு.

அத்துடன் இதனால் வேறு மாவட்டங்களுக்கு சென்று கூலி வேலை செய்து விட்டு வந்தவர்கள் பலர் போக்குவரத்து மூடப்பட்டதால் வாவிக்கரையில் நித்திரை செய்து பின்னர் காலையில் எழுந்து பயணித்த சம்பவங்களும்  உள்ளன.

படகில் பயணிக்கும் போது படகு இயந்திரம்  பழுதடைந்து படகு காற்றினால் வேறு திசைகளுக்கு இழுத்து செல்லப்பட்டு படகு கரை ஒதுங்கையமை, நடு ஆற்றில் நின்று படகு சுற்றியமை, நெல் ஏற்றிச் சென்ற வாகனங்களும் வாவிக்கரையில் விழுந்த நினைவுகள் மறக்க முடியாதவை.

வெள்ளம் ஏற்பட்டால் போக்குவரத்து தடை அதுபோல பலத்த காற்று வீசினால் போக்குவரத்து தடை என பல தடைகளை எதிர் கொள்ள நேரிட்டது

இவ்வாவிப் போக்குவரத்தின் போது வாவியிலே தவறி விழுந்து உயிர் தப்பியவர்களும் உள்ளனர் அதுபோல மரணித்தவர்களும் உள்ளனர்.
இவ்வாறு பல நினைவுகளை தந்த மண்முனை வாவி போக்குவரத்துக்கு கஷ்ட்டத்திற்கு  ஒரு முற்றுப்புள்ளியாக மண்முனை பாலம் அமைத்து இன்று திறந்து விடப்படுவதை இட்டு மக்கள் மனமகிழ்வதோடு படுவான்கரை மக்கள் உளம் கனிந்த நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்



 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X