2025 மே 02, வெள்ளிக்கிழமை

மது, போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2014 மே 20 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மூலம் அம்மாவட்டத்தில் மது மற்றும் போதைப்பொருள்  பாவனையாளர்களை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தை அம்மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் உளநலப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய மாணவர்களுக்கு 'மது, போதைப்பொருள், புகையிலை, வெற்றிலை ஆகியவற்றின் பாவனையிலிருந்து  எம்மவர்களை விடுவிப்போம்;' எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு  திங்கட்கிழமை (19) நடத்தப்பட்டது.

காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய அதிபர் எஸ்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வளவாளர்களாக  ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.நஜீப்கான், சுகாதார கல்வி அதிகாரிகளான ஜி.ரத்னகுமார், ஏ.எல்.புஹாரி உள்ளிட்டோர் விளக்கமளித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .