2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பாதுகாப்பான பயணம் தொடர்பில் செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 மே 20 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


வாகன விபத்துக்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலும் பாதுகாப்பான பயணம் தொடர்பிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பான செயலமர்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்றது.
இதன்போது, வாகன விபத்துக்கள் தொடர்பான காணொளியொன்றும் காண்பிக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.கருணாகரன், காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X