2025 மே 02, வெள்ளிக்கிழமை

'சாங்கிலிவில்' குளம் புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 மே 20 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்

'இயற்கைமுறை விவசாயத்தை ஊக்குவிக்கும்' செயற்றிட்டத்தின் கீழ், சேதமடைந்துள்ள விவசாயக் குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மாங்கேணி மத்தி கிராம அலுவலகர்  பிரிவிலுள்ள 'சாங்கிலிவில்' குளத்தை  புனரமைப்பதற்கான வேலைகள் திங்கட்கிழமை  (19) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வாகரை வேள்விஷன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஜி.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் என்.சிவலிங்கம், வாகரை பிரதேச செயலாளர்  எஸ்.ஆர்.ராகுலநாயகி, பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர் எஸ்.நவிரதன், வாகரை வேள்விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் பொன் வின்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வாகரை பிரதேசத்திற்கான வேள்;விஷன் நிறுவனத்தின் அனுசரணையில் கொரிய நாட்டின் கொய்கா (முழுஐஊயு) நிறுவனத்தின் 94 இலட்சம் ரூபா நிதியுதவியில்; சாங்கிலிவில் குளம் புனரமைக்கப்படவுள்ளது.  இக்குளத்தின் மூலம்  இங்குள்ள 500 ஏக்கர் விவசாயக் காணியில் இரண்டுபோக விவசாயச் செய்கையை மேற்கொள்ள முடியும் என வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .