2025 மே 02, வெள்ளிக்கிழமை

குடும்பச் சண்டையை விலக்கச் சென்ற பெண் பலி

Kogilavani   / 2014 மே 20 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.ரவீந்திரன், ரி.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்


அயல்வீட்டில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை விலக்கச் சென்ற பெண்ணொருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை(19) மட்டக்களப்பு, வீரங்சேனை கிராமத்தில் இடம்பெற்றதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் 6 பிள்ளைகளின் தாயான (48 வயது)  அரியமலர் என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இவர் படுகாமயடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



(படங்கள்: எஸ்.ரவீந்திரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .