2025 மே 02, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2014 மே 20 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் மக்களை வலுவூட்டும் வகையில் கிராமங்கள் தோறும் நடத்திவரும் நடமாடும் சேவையின் கீழ், காத்தான்குடியிலுள்ள 05 கிராம அலுவலகர் பிரிவுகளுக்குமான நடமாடும் சேவை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டப வளாகத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்றது.

இதன்போது,  காத்தான்குடி பிரதேச செயலகம் அறிமுகப்படுத்தியுள்ள வட்டியில்லா கடன் திட்டத்தில்  இரண்டாம் கட்டமாக தலா 35,000 ரூபா படி இருவருக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டன.

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல்,  பிறப்பு, இறப்பு, திருமண பிரதிச் சான்றிதழ்கள், முதியோர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த உள்ளிட்ட சேவைகளும் மேற்கொள்ளப்பட்டன. 

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலின் தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.கருணாகரன், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அதிகாரிகளெனப் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .