2025 மே 02, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு நடமாடும் சேவை

Kanagaraj   / 2014 மே 20 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கிறிஸ்தவ வாலிபர் சங்கம் (வை.எம்.சீ.ஏ) நடாத்திய விழிப்புணர்வு நடமாடும் சேவை நேற்று (19)  மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில்இடம் பெற்றது.

மகிழ்ச்சியான குடும்பம் ஆரோக்கியமான சமூகம் என்ற தொனிப் பொருளின் கீழ் சிறுவர் துஷ்;பிரயோகத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வுவை வழங்குவதற்காக் இந்நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மனநலவளத்துறை வைத்திய நிபுணர் கே.கடம்பநாதன், வைஎம்.சீ.ஏ. உத்தியோகஸ்;தர்கள், சிறுவர் கழகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நடமாடும் சேவையின் போது சிறுவர் குழுக்களின் விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .