2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஈகோர் மைட்றிக் மட்டக்களப்பு விஜயம்

Kanagaraj   / 2014 மே 20 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வடிவேல்-சக்திவேல்


சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை சங்கங்களின் சம்மேளனத்தின (ஐ.எவ்.ஆர்.சி) இலங்கைக்கான தலைமைப் பிரதிநிதி ஈகோர் மைட்றிக் (igor Dmitryuk) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைக்கு இன்று செவ்வாய் கிழமை(20) விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது, சர்வதேச செஞ்சிலுவைச் செம்பிறைச் சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடாகவும் ஏனைய, தேசிய சங்கங்கள் ஊடாகாவும் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி அவர் கேட்டறிந்து கொண்டார்.

மேலும்  மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திடங்கள் பற்றியும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் பிரதிநிதிநிதிகளிடம் அவர் கேட்டறிந்து கொண்டார்.

இச்சந்திப்பின்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா, செயலாளர் மதிசுதன், கிளை நிறைவேற்று உத்தியோகஸ்தர் வீ.பிறேமகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .