2025 மே 02, வெள்ளிக்கிழமை

முதலாவது அபிவிருத்திக்குழுக் கூட்டம்

Kanagaraj   / 2014 மே 20 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
மட்டக்களப்பு மாவட்டத்தின், 2014 ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் எதிர் வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை; நடைபெறவுள்ளது.
 
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கொக்கட்டிச்சோலை கருணா அம்மான் மண்டபத்தில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது.
 
இக் கூட்டத்தில் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்பட திணைக்கள தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் மற்றும் மேற் கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .