2025 மே 02, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியிலுள்ள கடையிலிருந்து பழுதடைந்த பொருட்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2014 மே 20 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
,ரீஎல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பலசரக்குக் கடையொன்றிலிருந்து பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியான பெருந்தொகை உணவுப் பொருட்களை செவ்வாய்க்கிழமை (20) கைப்பற்றியதாக  காத்தான்குடி சுகாதார அலுவலகத்தின் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.ஏ.எம்.றபீக் தெரிவித்தார்.

இது தொடர்பில் தங்களுக்கு கிடைத்த  தகவலைத் தொடர்ந்து, இக்கடையில் காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது பழுதடைந்த 550 கிலோ  அரிசி,  100 கிலோ வெள்ளைப்பூடு, 325 கிலோ  பழப்;புளி, 200 கிலோ கொத்தமல்லி, 600 கிலோ  கடலை ஆகியவற்றையும்  காலாவதியான மற்றும் லேபல் ஒட்டப்படாத ஜாம் வகைகள், பிஸ்கட்டுக்கள்,  நூடில்ஸ் ஆகியவற்றையும் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் பலசரக்கு கடை உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகரான ஏ.ஏ.எம்.றபீக்,  பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ், கே.சங்கர், எம்.மிதுன்ராஜ், ரி.கருணாகரன் ஆகியோர் இக்கடையை சோதனையிட்டனர். 

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .